Search This Blog
Sunday, September 5, 2010
வேதபுரீஸ்வரர்,சௌந்தராம்பிகை திருக்கோயில் திருவழுந்தூர் (தேரழுந்தூர் )
தேரழுந்தூர் என்று அறியப்படும் ஊரின் கிழக்குப் பகுதியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இதே ஊரின் மற்றொரு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான விஷ்னுவின் ஆலயமும் இருக்கிறது. இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி சிவன் கோவிலின் வெளியே தனியாக அமைந்திருக்கிறது. கம்ப இராமயணத்தை இயற்றிய தமிழ் கவிஞர் கம்பர் பிறந்த ஊர் இதுவாகும். மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் ,கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.